பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்

tamil4health
By -
1


பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்

பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

உடல் மெலிவான தோற்றத்துடன் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். உடல் எடையை குறைப்பதற்காக பலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

பால் கலக்காத டீயை மட்டும் குடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏனெனில் தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் கலக்கப்படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளதால், அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்கிறது.

எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும் ரத்த அழுத்தம் குறையும் என அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


Post a Comment

1Comments

  1. மிகவும் பயனுள்ள பகிர்வு. நன்றி நண்பரே.!

    ReplyDelete
Post a Comment