“இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு":

tamil4health
By -
1

எள்ளில் உள்ள எண்ணெய் சத்துக்கள் உடல் மெலிவாக இருப்பவர்களை குண்டாக்கும் தன்மையுடையது என்பதற்காகவே இந்த பழமொழி கூறப்படுகிறது.


* எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள்ளின் பயன்பாடு இருந்துள்ளது. எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

* தமிழ்நாட்டு சமையலில் எள்ளிற்கு முக்கிய பங்குண்டு. இதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட எள்ளின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.

* நடுநிலை கொழுப்புகள் ஃபாஸ்போலிப்பிட்டுகள், ஆர்ஜினைன், சிஸ்டைன், ஹிஸ்டீன், ஐசோலியுசிஸ், லியுசன், லைசின், ஃபோலிக் அமிலம், சுக்ரோஸ், அசிட்டைல்பைரசைன் போன்ற ரசாயனப்பொருட்கள் எள் செடியில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.

* விதைகள், இலைகள், வேர் போன்றவை மருத்துவப்பயன் உடையவையாகும். எள் செடியின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும்.  கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

* எள் பொடியை உணவில் சேர்த்து உண்டால் மாதவிடாய் இன்மையையும், மாதவிடாய் வலியையும் போக்கும். குழந்தை பெற்ற பெண்கள் உணவுப்பொருட்களில் அதிக அளவில் எள் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் தளர்ந்த தசைகள் இறுகும். கருப்பைப் புண் குணமடையும்.

* விதைகள் நோய் தீர்க்கும். சிறுநீர் கழிவை கூட்டும். கட்டி வீக்கம் ஆகியவற்றை இளக்கும். இளம் பேதி மருந்தாக பயன்படும். மலச்சிக்கல் மற்றும் சீதபேதிக்கு பயன்தரும்.  வெந்தபுண், ஆவிக்கொப்புளம், சீழ்ப்புண்ணை ஆற்றும். தலைமுடிக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் அடிப்படைப் பொருளாக விதை எண்ணெய் பயன்படுகிறது.

* 100 கிராம் எள்ளில் 1450 மில்லிகிராம் சுண்ணாம்பு உள்ளது. உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல் எள்ளில் , தாமிரம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் , துத்தநாகம், வைட்டமின் பி1 , வைட்டமின் இ, ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகின்றன.

இதில் உள்ள நன்மையை உணர்ந்தே நம் முன்னோர்கள் உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் படிப்படியாக அதன் உபயோகம் இப்பொழுது குறைந்து வருகிறது.

Post a Comment

1Comments

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
Post a Comment