அதிக உயிர் இழப்புக்களை ஏற்படுத்தும் புற்று நோய்களிலே மார்பகப் புற்று நோய் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒரு புற்று நோயாகும்.
பெண்களே இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.ஆனாலும் ஆண்களுக்குக் கூட மார்பகப் புற்று நோய் ஏற்படலாம்.
மார்பகப் புற்று நோயானது மிகவும் ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கப் பட்டால் அதனால் ஏற்பட்டும் பாதிப்புக்களையும் மரணங்களையும் குறைத்துக் கொள்ள முடியும்.
இதை ஆரம்ப நிலையிலே கண்டுபிடிப்பதற்கான இலகுவான செலவற்ற வழியே இந்த சுய மார்பகப் பரிசோதனை.
இருபது வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதம் ஒருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ளுவது நல்லது.
எவ்வாறு இந்த பரிசோதனையைச் செய்வது?
இது மிகவும் இலகுவானது.
கண்ணாடி முன் நின்றபடி உங்கள் மார்பங்களை அவதானியுங்கள்.அதாவது உங்கள் மாற்பங்களின் தோலில் ஏதாவது நிறமாற்றம், தோல் உள்ளிழுத்தபடி காணப்படுதல் அல்லது முழைக்காம்பு உள்ளிழுத்தபடி காணப்படுதல் போன்ற மாற்றங்கள் இருக்கிறதா என்று அவதானியுங்கள்.
சந்தேகத்துக்கிடமான மாற்றங்கள் இருந்தால் வைத்தியரிடம் ஆலோசனை பெறுங்கள்.
அவ்வாறு சாதாரண நிலையில் அவதானித்த பின்பு , உங்கள் இரு கைகளையும் இடுப்பிலே இறுக்கமாக அழுத்தியபடி மார்பகங்களில் மேற்சொன்ன ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று அவதானியுங்கள்.
அடுத்ததாக உங்கள் விரல்களின் உட்பக்கத்தால் உங்கள் மார்பங்களை மெதுவாக வட்ட வடிவான அசைவுகள் மூலம் அழுத்தியபடி ஏதாவது கட்டிகள் தென்படுகின்றதா என்று அவதானியுங்கள்.
சந்தேகத்துக்கிடமான ஏதாவது மாற்றமோ கட்டியோ இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறவும்.
இறுதியாக உங்கள் முலைக்காம்பை அழுத்தி ஏதாவது திரவங்கள் வெளி வருகின்றதா என்று அவதானியுங்கள்.
அவ்வாறு திரவங்கள் ஏதாவது வெளி வந்தால் உடனடியாக வைத்தியரின் உதவியை நாடுங்கள்.
இருபது வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதம் ஒரு முறை இந்தச் சோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
Post a Comment
0Comments