தினமும் முட்டையை சாப்பிடுவது நல்லதா?

tamil4health
By -
0
முட்டையை சாப்பிடுவது

முட்டை என்பது வளமையான அளவிலான புரதத்தை கொண்டுள்ளது. முட்டையை அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்ணுவது சிறந்த வழியாகும்.

நினைவு தெரிந்த நாள் முதல் காலை உணவில் முட்டையை சேர்த்து கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம்.

முட்டைகளை தினமும் உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்று நினைத்து இன்றைய இளைய தலைமுறையினர் வளமையான சக்தி வாய்ந்த உணவை உண்ண  பயப்படுகின்றனர்.. இருப்பினும் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் கொழுப்புகள் குறையும் என்பதே உண்மையாகும்.

உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முட்டை அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் என்ற பயமின்றி தினமும் ஒரு முட்டையை கண்டிப்பாக உண்ணலாம். பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.

அதற்கு காரணம் அரை வேக்காடு முட்டையிலிருந்து நம் உடலுக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்குவதில்லை. முட்டையை உங்கள் உணவில் இருந்து முழுவதுமாக நீக்குவதற்கு பதிலாக அதனை புத்திசாலித்தனமாக உட்கொண்டால் முழுஆரோக்கியத்தையும் பெறலாம்..

Post a Comment

0Comments

Post a Comment (0)