நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

tamil4health
By -
0


மழைக்காலமானது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இக்காலத்தில் நோய்களானது நீரின் வழியே அதிகம் பரவக்கூடும். எனவே இந்த மழைக்காலத்தில் குடிக்கும் நீரை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வர வேண்டும். இதனால் குடிக்கும் நீரில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் இருந்தாலும், அவை அழிக்கப்பட்டு, உடலை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கும்.


ஆனால் பலருக்கு சுடுநீரை குடிப்பது என்றால் பிடிக்காது. மேலும் இத்தகையவர்கள் உடல்நலம் சரியில்லாத காலத்திலும் சுடுநீரை குடிக்கமாட்டார்கள். ஆனால் சுடுநீர் குடிப்பதால், உடலை நோய்கள் தாக்காமல் இருப்பதுடன், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த கட்டுரையில், நீரை கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பார்த்து, இனிமேலாவது நீரை கொதிக்க வைத்து குடித்து வாருங்கள்.

நல்ல பாதுகாப்பு அளிக்கும்

பொதுவாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் அவர்கள் முதலில் பரிந்துரைப்பது நீரை காய்ச்சி குடிக்க சொல்வார்கள். ஏனெனில் உடல் நலம் பாதிக்கப்படுவதற்கு முதன்மையான காரணமாக இருப்பது நீர் தான். அத்தகைய நீரானது கிருமிகள் நிறைந்திருந்தால், அவை உடல் நலத்தை மேலும் பாதிக்கும். அதிலும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வர ஆரம்பிக்கும். எனவே நீரை கொதிக்க வைத்து குடிப்பதால், அவை கிருமிகளின் தாக்கத்தை குறைப்பதுடன், டைபாய்டு, மஞ்சள் காமலை போன்றவற்றையும் விரைவில் குணமாகச் செய்யும். ஆகவே உடலை நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டுமானால், நீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

செரிமானத்தை அதிகரிக்கும்

தினமும் காலையில் ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலையில் குடித்து வந்தால், அவை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டினை சீராக வைக்கும்.

டாக்ஸின்களை வெளியேற்றும்

நீரை காய்ச்சி குடிப்பதன் மூலம், உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, உடலானது சுத்தமாகவும், கொழுப்புக்கள் இன்றியும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே முடிந்தவரையில் குடிக்கும் நீர் சுடுநீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

தொண்டைக்கு பாதுகாப்பானது

கொதிக்க வைத்த நீர் தொண்டையில் உள்ள புண் மற்றும் நோய்த்தொற்றுக்களை நீக்கவல்லது. அதிலும் தொண்டைக் கரகரப்பு இருப்பவர்கள், சுடுநீரை குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள், எப்போதும் சுடுநீர் குடிப்பது நல்லது.

குழந்தைகளுக்கு நல்லது

பெரியவர்களை விட, குழந்தைகள் தான் அவ்வப்போது காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். எனவே சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு நீரை காய்ச்சி குடிக்க வைத்துப் பழகினால், பிற்காலத்தில் நோய் தாக்குதல்களால் அவஸ்தைப்படாமல் இருப்பார்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)